If you are between 21 years and 25 years or not, please read....
20 வயதில் செய்யத் தவறிய விஷயங்கள் :
- · மேற்படிப்பு பற்றிய சரியான திட்டமிடுதலோ வழிகாட்டுதலோ இல்லாமல் வேலைக்கு சென்றதால் இன்று வரை அதே B.Sc தான். வெகுசில அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே 50 வயதில் மேற்படிப்பு சாத்தியம்.
- · 22 வயது தொடங்கி இன்று வரை 16 ஆண்டுகள் திட்டமிட்டு சேமிப்பில் ஈடுபட்டிருந்தால் Compounding basis ல் சில பல லட்சங்களைச் சேர்த்திருக்கலாம். சேமிப்பிற்க்கான சில வழிமுறைகள் இதோ :
சிறியதாய் ஒரு சீட்டுக் கம்பெனியில் மாதந்தோறும் ஒரு தொகையைச் சேர்க்கலாம் ( பதிவு பெற்ற நிறுவனங்கள்) Chit funds - Basic information
மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை SIP ல் முதலீடு செய்யலாம் . இதற்க்கென பிரத்யேகமான advisors ஐ அணுகலாம். கீழே உள்ள லிங்க் ஐ சொடுக்கவும் . How to choose good mutual funds to invest.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகையை செலுத்தி இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். MONEY BACK POLICY மூலம் ஒரு குறிப்பிட்ட கால கெடுவில் நமக்கு கிடைக்கும் தொகையை மேற்கொண்டு பிரீமியம் செலுத்துவதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பணிபுரியும் நிறுவனத்தில் VPF திட்டத்தில் ஒரு சிறிய தொகையை செலுத்துவதும் ஒரு அழகிய முயற்சியே. VPF - Basic information
Compounding additions க்கு ஒரு எடுத்துக்காட்டு :
வருடம் முதலீடு ஆண்டு ஒன்றுக்கு ஆண்டின் முடிவில் 1 12,000 13,020 2 12,000 27,147 3 12,000 42,474 4 12,000 59,104 5 12,000 77,148 6 12,000 96,726 7 12,000 117,968 8 12,000 141,015 9 12,000 166,021 10 12,000 193,153 11 12,000 222,591 12 12,000 254,531 13 12,000 289,186 14 12,000 326,787 15 12,000 367,584 நீங்கள் செலுத்திய தொகை ரூ. 180,000 15ஆம் ஆண்டு முடிவில் ரூ.367,584 ஆக மாறியிருக்கும்.
- · தேவையில்லாத முயற்சிகள், தகுதியில்லாத ஆட்களின்பால் வியப்பு (wrong inspirations) இவை வாழ்க்கையின் போக்கைத் தாறுமாறு ஆக்கி விட்டது. நம்மை உபயோகப்படுத்தி அறிவுரை கூறும் ஆற்றலை வளர்த்துக்கொண்டுள்ளார்கள் என்பது புரியும் . They are not really so good who I thought very good.
- · திருமணம் செய்யும் வயதைத் தெளிவாக முடிவு செய்யுங்கள். 27 வயதுக்குள் உத்தமம். 30 ஆண்டுகள் கடந்து விட்டால் விட்டு விடுங்கள். ஹார்மோன்கள், நாம் வாழ்வில் செட்டில் ஆகும் வரை காத்திருப்பதில்லை. ஹி ..ஹி ..
Then it is
up to you : )
- பணத்தைத் தேடி ஓடும் போது சில நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் பாராமுகமாய் இருந்து விட்டு பின்னாளில் அவர்களின் உறவுக்காக ஏங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இறுதி வரை அவர்கள் அண்மை இல்லாமலே கூட போகலாம். It is not TOO LATE even now.
- சில திருமண விழாக்களில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
- நண்பர்களின் முக்கிய தருணங்களில் உங்கள் மேலாளரை மறந்து விடுங்கள். He will never become your friend whom you missed.
- குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுப்பதும் அவற்றை செயல் முறை படுத்துவதும் தொடங்கப்பட வேண்டிய வயதும் இதுவே.
👉👉👉👉👉 இன்னும் தொடரும்👉👉👉👉👉
Comments
Post a Comment